டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் கேரி 26 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்களும், 3-வது வீரரான ட்ராவிஸ் ஹெட் 29 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன்களும் அடிக்க அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.
44 ரன்கள் அடித்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் வீரர் கேரி
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. தொடக்க வீரர் கர்டிஸ் பேட்டர்சன் 37 பந்தில் 48 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்க கொடுத்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 17.4 ஓவரில் 110 ரன்களில் சுருண்டது.