செய்திகள்

கேப் டவுன் டெஸ்ட்: புவனேஷ்வர்குமார் சாதனை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் புவனேஷ்வர்குமார் முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். #SAvIND #INDvSA #BhuvneshwarKumar

மாலை மலர்

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் முத்திரை பதித்து வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். 24 வயதான பும்ரா இந்தியாவின் 290-வது டெஸ்ட் வீரர் ஆவார். தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் பயணத்தை தொடங்கிய 7-வது இந்தியர் ஆவார்.

இந்த டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் முதல் ஓவரிலேயே, டீன் எல்கரின் விக்கெட்டை கபளகரம் செய்தார். இந்திய துணை கண்டத்துக்கு வெளியே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், தொடக்க ஓவரிலேயே விக்கெட் எடுப்பது 1992-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

‘ஸ்விங்’ செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார் தனது முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். 2001-ம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு டெஸ்டில் ஒரு பவுலர் தனது மூன்று ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுப்பது இது 3-வது நிகழ்வாகும். நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்ளின் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 2005-ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (வங்காளதேசத்துக்கு எதிராக, 2017-ம் ஆண்டு) ஆகியோர் ஏற்கனவே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.