கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. காயம் அடைந்த புவனேஸ்வர் குமார் இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி அடைந்து விட்டார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக பந்து வீசினால், ஐந்தாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது.