வேலாயுதபாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், என்.புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இப்பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம், மத்திய பிரதோசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.4000-க்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.1750-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3000-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1500-க்கும் வாங்கி சென்றனர். இந்த வாரம் இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை ரூ.5500- க்கும், முதிகால் வெள்ளக் கொடி வெற்றிலை ரூ.2800-க் கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.4300-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.2200-க்கும் வாங்கி சென்றனர்.
வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். #tamilnews