பெங்களூர்:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பெங்களூருவில் 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - பெங்களூர் எப்.சி. அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் 14-வது நிமிடத்தில் பெங்களூருவின் ஜுவானன் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் 1-0 என கோல் கணக்கில் பெங்களூரு முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் மரிகோ டிசோசா ஜூனியர் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து இரு அணிகளும் சமநிலை வகித்தன.
ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பெங்களூருவின் சுனில் சேத்ரி இரண்டாவது கோலை அடித்தார். இந்த கோல் பெங்களூரு அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இப்போட்டியில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றது. #HeroISL #bengaluruFC #northeastunited #tamilnews