பெங்களூர்:
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஸ்வாதி சார்கார். இவர் தனது கணவருடமிருந்து பிரிந்து கடந்த 7 மாதமாக 9 வயது மகள் ஆஷிகாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வேளையில் தனது மகள் ஆஷிகாவை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் சிறுமி காயங்களுடன் உயிர் தப்பினாள். ஆஷிகாவின் அழுகுரல் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர்.
இதனையடுத்து, காயங்களுடன் தப்பிய மகள் ஆஷிகாவை மீண்டும் மாடிக்கு கொண்டு வந்து இரண்டாவது முறையாக கீழே தள்ளி விட்டுள்ளார். இம்முறை ஆஷிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை நேரில் பார்த்தவர்கள் ஸ்வாதியை பிடித்து அங்கு இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் போலீசிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்வாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமி ஆஷிகா லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் மகளை கொலை செய்த பின்னர் சார்காரும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.