செய்திகள்

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு

கர்நாடக சட்ட விதிகளின் படி சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. #Sasikala

மாலை மலர்

சசிகலா கணவர் நடராஜனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருகிறது. அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள சசிகலா விரும்புகிறார்.

இதற்காக பரோலில் வர அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார். முதல் 5 நாட்கள் வரை சிறைத்துறை நிர்வாகமே பரோல் வழங்க அதிகாரம் உள்ளது. இதற்காக சசிகலா சார்பில் வக்கீல் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்டை சந்தித்து பரோல் கேட்டார். அவர்கள் பரோல் கொடுக்க மறுத்து விட்டனர்.

கர்நாடக சட்டப்படி கைதிகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறைதான் பரோல் வழங்கப்படும். கடந்த அக்டோபர் மாதம் தான் சசிகலா பரோலில் வந்து சென்றார்.

எனவே அவர் கடைசியாக பரோலில் சென்று 5 மாதங்கள் தான் ஆகிறது. எனவே தான் அவருக்கு பரோல் கொடுக்க சிறை சூப்பிரண்டு மறுத்து விட்டார்.

அடுத்தக் கட்டமாக இன்று பிற்பகலில் சிறைத்துறை டி.ஜி.பி.யை சந்திக்க முடிவு செய்துள்ளனர். அவரும் பரோல் கொடுக்க மறுத்து விட்டால் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரோல் வாங்க முடிவு செய்துள்ளனர்.

பரோல் மனுவுடன் நடராஜன் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னர் நடராஜன் குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா அவரை அருகில் இருந்து கவனித்தார்.