செய்திகள்

ஊதிய ஒப்பந்த பட்டியல்- ஷமி பெயர் நிறுத்திவைப்பு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி புகார் கூறியுள்ளதை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

மாலை மலர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பான புகாரை கூறியுள்ளார். ஷமி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர் பல பெண்களுடன் சகவாசம் வைத்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது. விசாரணைக்கு பிறகே அவரை ஒப்பந்தத்தில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.