புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவியும், வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாடவும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர்
ஐ.பி.எல். 2018 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா இன்று தெரிவித்துள்ளார்.
#SteveSmith #DavidWarner #BallTampering #Ipl2018 #Tamilnews