செய்திகள்

வங்கக்கடலில் புதிய புயல்: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்கக்கடலில் புதிய புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலை மலர்

ராமேசுவரம்:

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வங்கக்கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்ட ஒக்கி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஒக்கி புயல் கரையை கடந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது. இது சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

புதிய புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான டோக்கன் களையும் இன்று வழங்கவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்லவில்லை. 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.