செய்திகள்

17 பேரை பலி கொண்ட டெல்லி பவானா தீ விபத்து: ஆலை உரிமையாளர் கைது

டெல்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில் சம்மந்தப்பட்ட ஆலை உரிமையார் கைது செய்யப்பட்டுள்ளார். #BawanaFire

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைந்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் கிடங்கில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மளமளவென பரவிய தீ கிடங்கு முழுவதும் பரவியது.

10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தீக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆலை உரிமையார் மனோஜ் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். #BawanaFire #TamilNews