கைது 
செய்திகள்

வத்தலக்குண்டு அருகே திருவிழாவில் மோதல் - 2 பேர் கைது

வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே கட்டகாமன்பட்டி மந்தையம்மன் கோவில் திருவிழா பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது. இதில் வீடு மற்றும் பொருட்கள் சூறையாடப்பட்டன. அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது.

மேலும் சாலைமறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்தலக்குண்டு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டி, பழனிச்சாமி ஆகியோரை கைது செய்து நிலக்கோட்டை கோட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT