வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டி ஆசிரமம் காலனியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 60). டீக்கடை வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று கணவாய்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போட வந்தார்.
அப்போது பின்னால் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (18) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக வெள்ளைச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது அஜித்குமார் பைக் பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த வெள்ளைச்சாமி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.