செய்திகள்

வத்தலக்குண்டு அருகே மரத்தில் வாகனம் மோதி 2 பேர் பலி

வத்தலக்குண்டு அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வத்தலக்குண்டு:

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது21). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவரது நண்பர் உசிலம்பட்டி கொக்குளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (27).

இவர்கள் 2 பேரும் கடந்த 19-ந் தேதியன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு- பெரியகுளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

பலத்த காயம் அடைந்த 2 பேரும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT