விபத்து பலி 
செய்திகள்

பேசின்பிரிட்ஜ் பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் பலி

பேசின்பிரிட்ஜ் பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராயபுரம்:

வில்லிவாக்கத்தை அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் டேனியல் (வயது 21).

இவர் நண்பரான பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (23) என்பவருடன் இன்று அதிகாலை பேசின்பிரிட்ஜ் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் நிலை தடுமாறிய லிவிங்ஸ்டன் டேனியல் பாலத்தில் இருந்து கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்தார்.

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த லிவிங்ஸ்டன் டேனியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் கார்த்திக் அதிர்ஷ்டவசமாக பாலத்திலேயே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவருக்கு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேசின்பிரிட்ஜ் பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைக்க தற்போது வேலை நடந்து வருகின்றன. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.