செய்திகள்

டாக்கா டெஸ்ட்- வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்னில் வெற்றி- தொடரை 2-0 எனக்கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. #BANvWI

மாலை மலர்

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. மெஹிது ஹசன் மிராஸ் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 111 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் (10), ஹெட்மையர் (39), டவ்ரிச் (37) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மெஹிது மிராஸ் மிராஸ் 7 விக்கெட்டும், சாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

397 ரன்கள் பின்தங்கியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி பாலோ-ஆன் ஆகி 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மையர் மட்டும் தாக்குப்பிடித்து 92 பந்தில் 9 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 93 ரன்கள் குவித்தார்.


ஹெட்மையர்

ரோச் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 213 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் சாய்த்த மெஹிது ஹசன் மிராஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.