தொடக்க வீர்ர தமிம் இக்பால் 53 ரன்களும், இம்ருல் கெய்ஸ் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ, முஷ்பிகுர் ரஹிம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதனால் வங்காள தேசத்தின் ரன் விகிதம் ஓவருக்கு நான்கிற்கு மேல் சென்று கொண்டிருந்தது. மொமினுல் ஹக் சதம் அடிக்க, முஷ்டாபிகுர் ரஹிம் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தனர்.
83 ரன்கள் அடித்த மெக்முதுல்லா
இருவரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. மொமினுல் ஹக்யூ 175 ரன்னுடனும், மெஹ்முதுல்லா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
176 ரன்கள் குவித்த மொமினுல் ஹக்யூ
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மொமினுல் ஹக்யூ மேலும் 1 ரன்கள் எடுத்து 176 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மொசாடெக் ஹொசைன் 8 ரன்ன்னிலும், மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்னிலும், சன்சாமுல் இஸ்லாம் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
என்றாலும் மெஹ்முதுல்லா அவுட்டாகாமல் 83 ரன்கள் எடுக்க வஙகாள தேசம் 129.5 ஓவரில் 513 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் லக்மமல், ஹெராத் தலா 3 விக்கெட்டும், சண்டகன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.