செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் 428 ரன்கள் குவித்தது தென்ஆப்பிரிக்கா

வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர், மர்க்கிராம் சதத்தால் முதல் நாளில் தென்ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்துள்ளது.

இருவரும் வங்காள தேசத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். தொடக்க வீரர்களை பிரிக்க வங்காள தேச பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை. 8 பேர் பந்து வீசினார். 8 பேரின் பந்து வீச்சையும் விளாசிய இருவரும் சதம் அடித்தனர்.

தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 243 ரன்னாக இருக்கும்போது டீன் எல்கர் 113 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய மார்க்கிராம் 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.