பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. வார்னர் (123), ஹேண்ட்ஸ்காம்ப் (82), ஸ்மித் (58), மேக்ஸ்வெல் (38) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 377 ரன்கள் குவித்தது. வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டும், மெஹெதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 72 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயனின் அபார பந்து வீச்சால் வங்காள தேசம் 157 ரன்னில் சுருண்டது. முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்னும், சபீர் ரஹ்மான் 24 ரன்னும், மொமினுல் ஹக்யூ 29 ரன்னும் சேர்த்தனர். நாதன் லயன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.