செய்திகள்

அடுத்த மாதத்தில் இருந்து வார்னர், பான்கிராப்ட் களம் இறங்குகிறார்கள்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதத்தில் இருந்து கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்கள்.

மாலை மலர்

இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்டிற்கு 9 மாதமும் தடைவிதிக்கப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடரிலும், உள்ளூர் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதம் கிரிக்கெட்டிற்கு திரும்புகிறார்கள். ஜூலை 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை டார்வினில் நான்கு அணிகள் பங்கேற்கும் என்டி ஸ்டிரைக் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா 8 டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இதில் வார்னர் 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெறும் 50 ஓவர் ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பான்கிராப்ட் தொடர் முழுவதும் விளையாடுகிறார்.