மதுரை:
மதுரை அய்யர் பங்களா பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
முதல் மாடியில் செயல்பட்டு வந்த இந்த வங்கி கிளையில் இன்று காலை திடீரென கரும்புகை கிளம்பியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
பாங்கிக்குள் லேசாக சேதம் மட்டும் ஏற்பட்டது. தீயை விரைந்து கட்டுப்படுத்தியதால் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் தப்பின.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த திடீர் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.