கோப்பு படம். 
செய்திகள்

தருமபுரியில் கொரோனாவுக்கு வங்கி மேலாளர் பலி

தருமபுரியில் கொரோனா தொற்றுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வங்கி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடை பிடிக்காத காரணத்தால் கொரோனா ஆட்டம் வேகமெடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெரு அருகே உள்ள தேசியமய மாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளருக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது.

இதனால் அவர் தருமபுரியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அதே வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வங்கி மூடப்பட்டது.