செய்திகள்

ஊதிய உயர்வு கோரிக்கை தோல்வி - மே 9ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு விவகாரம் தொடர்பாக புதன்கிழமை (மே 9) நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. #BankStrike #AIBOC

மாலை மலர்

மும்பை:

வங்கி ஊழியர்களின் ஊதியம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் அவர்கள் ஊதியம் இதுவரை உயர்த்தப்படாமல் உள்ளது. 

இந்நிலையில், வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரிகளுடன் மும்பையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில், வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அளிக்க நிதி அமைச்சகம் ஒத்துக் கொண்டது. ஆனால் அது போதாது என கூறி, 2 சதவீத ஊதிய உயர்வை ஏற்க வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் மறுப்பு தெரிவித்தனர். 

எனவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வரும் புதன்கிழமை (மே 9) நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 2 நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.