வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு 
செய்திகள்

வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி அதிகாரிகள் 26, 27-ந்தேதிகளில் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

இரண்டு நாட்களுக்குப்பிறகு 28-ந்தேதி நான்காவது சனி, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காத  சூழ்நிலை உருவாகும் நிலை இருந்தது.

இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர்  கூறியிருப்பதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.