செய்திகள்

நாகமலைபுதுக்கோட்டையில் வங்கி ஊழியர் மகன் தற்கொலை

நாகமலைபுதுக்கோட்டையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வி‌ஷம் குடித்து வங்கி ஊழியர் மகன் தற்கொலை செய்தார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை நாகமலை புதுக்கோட்டை கணேஷ்நகரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர். இவரது மகன் மணிவாசகம் (வயது 28).

இவர் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்து இருந்தார். இந்த நிலையில் பங்கு சந்தை இறக்கம் கண்டதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த மணிவாசகம் வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசில் பொன்னுச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.