செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட்டில் கெய்ல் 19-வது சதம் அடித்து அசத்தல்

பி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் நேற்று நடந்த ஆட்டத்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது 19-வது சதத்தை பதிவு செய்தார்.

மாலை மலர்

ஐ.பி.எல். போன்று பி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் குல்னா டைட்டன்சுக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக நேற்று களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ருத்ரதாண்டவம் ஆடினார்.

51 பந்துகளில் 14 சிக்சர், 6 பவுண்டரியுடன் 126 ரன்கள் விளாசியதுடன் 168 ரன்கள் இலக்கையும் 15.2 ஓவர்களிலேயே எட்ட வைத்தார். பி.பி.எல். போட்டியில் கெய்லின் 4-வது சதமாகும். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது 19-வது சதத்தை பதிவு செய்ததுடன், 800 சிக்சர் நொறுக்கிய முதல் வீரர் என்ற சாதனைக்கும் 38 வயதான கெய்ல் சொந்தக்காரர் ஆனார்.