செய்திகள்

அமர்நாத் பக்தர்கள் மீது தீவராதிகள் தாக்குதல்: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது தீவராதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியான சம்பவத்துக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்றிரவு அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற வாகனத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட மிக கோரமான தீவிரவாத தாக்குதலில் பல யாத்ரீகர்கள் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

வங்காளதேசத்தை பொருத்தவரை வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுடன் எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்வதில்லை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. இந்தியாவின் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள அண்டை நாடு என்ற வகையில் இந்த பிராந்தியத்தில் இருந்து தீவிரவாத தொல்லையை ஒழிக்கும் பணியில் உங்களுடன் இணைந்து தொடர்ந்து ஒத்துழைத்து செயலாற்றுவோம்.