விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்த ஊழியர்கள். 
செய்திகள்

காட்பாடி அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் - பெங்களூர் ரெயில்கள் தாமதம்

காட்பாடி அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூர் செல்லும் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

மாலை மலர்

வேலூர்:

காட்பாடியில் இருந்து பெங்களூர், சேலம் மார்க்கத்தில் செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை ரெயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

காவனூர் என்ற இடத்தில் தண்டவாள இணைப்புகள் விலகி விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதைகண்டு திடுக்கிட்ட ஊழியர்கள் உடனடியாக காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் ரெயில் மற்றும் 3 சரக்கு ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

காட்பாடியில் இருந்து ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர்.

இதற்கு பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன.  #tamilnews