செய்திகள்

பெங்களுருவில் தமிழில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள்- போஸ்டர்கள் கிழிப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம்

கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் பெங்களுவில் தமிழில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்ததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

பெங்களுரு:

கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் பெங்களுவில் தமிழில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். ஆடிக்கிருத்திகையை யொட்டி முருகன் படத்துடன் தமிழில் எழுதி வைத்து இருந்த பேனர்களையும் அவர்கள் கிழித்தனர். இதனால் பெங்களுரு பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

பெங்களுருவில் வசிக்கும் தமிழர்களும் அச்சம் அடைந்து உள்ளனர். ஏற்கனவே பெங்களுரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கன்னட மொழியுடன் இந்தி மொழியில் எழுதி வைத்து இருந்த பெயர் பலகையை கன்னடர்கள் தார் பூசி அழித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் வேறு மொழியை அனுமதிக்க முடியாது என்று நேற்று சுதந்திர தினவிழா கொடியை ஏற்றிவைத்து முதல் மந்திரி சித்தராமையா பேசிய நிலையில் இன்று கன்னட அமைப்பினர் தமிழ் மொழிக்கு எதிராக போராடி வருவதால் மீண்டும் கர்நாடகத்தில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.