செய்திகள்

பெங்களூரு - புதுச்சேரி இடையே விமான சேவை தொடங்குகிறது

பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #flightservice #Bangalore #Puducherry #tamilnews

மாலை மலர்

பெங்களூரு:

பெங்களூரு - புதுச்சேரி இடையே புதிதாக விமான சேவை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15-ந் தேதி காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் புறப்பட்டு 10.30 மணிக்கு புதுச்சேரி வமான நிலையம் வந்துசேரும்.

மீண்டும் அந்த விமானம் 10.50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் சென்று சேரும். தினமும் இந்த விமானம் இயக்கப்படும். இந்த விமானத்தில் 78 இருக்கைகள் உள்ளன.  #flightservice #Bangalore #Puducherry #tamilnews