செய்திகள்

பட்ஜெட்டைக் கண்டித்து ஆந்திராவில் முழு அடைப்பு: பேருந்துகளை மறித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இடதுசாரிகள் சார்பில் இன்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

பாராளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரிகள் சார்பில் ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனசேனா, மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அரசு போக்குவரத்துக்கழகம் இதில் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT