செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி: நெல்லையப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, நெல்லையப்பர் கோவிலில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு கோபுர வாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடையில் பரவிய தீயால் அங்கிருந்த 40 கடைகள் எரிந்து சாம்பலானது. கோவில் பிரகாரத்தில் உள்ள தூண்கள், சிலைகள் சேதம் அடைந்தன. வீரவசந்தராயர் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு கடையில் திருஷ்டி சுற்றிய சூடம் விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இந்நிலையில், மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. விளக்குகள் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.