செய்திகள்

சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார். #ChennaiSpecialCourt #MinisterBalakrishnaReddy

மாலை மலர்

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னையில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வரும் தனிகோர்ட்டு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணாரெட்டி இன்று மேல்முறையீடு செய்தார்.