வாடிப்பட்டி:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 32).
இவர் கடந்த 6 மாதமாக மதுரை மாவட்டம், சமய நல்லூர் பஸ் நிலையம் அருகில் பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சுப்பிரமணி தோடனேரி விலக்கில் தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயம் எதுவுமில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சமயநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சமய நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.