ஸ்வப்னா சுரேஷ் 
செய்திகள்

ஸ்வப்னா சுரேஷ்-க்கு ஜாமீன்: இந்த ஒரு காரணத்தை காட்டி நீதிமன்றம் வழங்கியது

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்-க்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் முதலமைச்சர் அலுவலகம் வரை உலுக்கியது கேரளா தங்கம் கடத்தல் வழக்கு. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மத்திய புலானாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தொடர்ந்திருந்தார். பலமுறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 60 நாட்கள் ஆகியும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அதனால் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடைமுறையின்படி 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால் தானாகவே ஜாமீன் வழங்கப்படும்.

இன்னும் என்.ஐ.ஏ. தொடர்ந்துள்ள வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், ஸ்வ்பான சுரேஷ் ஜெயிலில் இருந்து வெளியே வர இயலாது.

SCROLL FOR NEXT