இந்திய கரன்சி 
செய்திகள்

மணல் கடத்தலில் கைதானவருக்கு ஜாமீன்- நிவாரண நிதி செலுத்த நீதிபதி உத்தரவு

மணல் கடத்தலில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

சென்னை:

நாகை மாவட்டம், கிடாரன் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீண் குமார். உரிமம் இல்லாமல் ஒரு யூனிட் மணலை கடத்தியதாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். பின்னர் பிரவீன்குமாருக்கு ஜாமீன் வழங்கி, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 ஆயிரம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.