செய்திகள்

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த பாகுபலி-2 பாடல்

பாகுபலி-2 படத்தில் இடம்பெற்றிருந்த சாஹோரே பாடலை யூடியூப்பில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். #Bahubali2 #SaahoreBahubali #100millionviews #Youtube

பாகுபலி-2 படத்தில் இடம்பெற்றிருந்த சாஹோரே பாடலை யூடியூப்பில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்கள் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘பாகுபலி 3’ படத்தை ராஜமௌலி உருவாக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. தெலுங்கு பதிப்பில் வெளியான ‘சாஹோரே பாகுபலி’ பாடலை யூடியூப்பில் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த பாடல் பாகுபலி 2 படத்தில் நடிகர் பிரபாசின் அறிமுக பாடலாகும்.

SCROLL FOR NEXT