செய்திகள்

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் - பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்றுவரும் பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் எச்எஸ் பிரனோய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #BAC2018 #HSPrannoy #PVSindhu

மாலை மலர்

பீஜிங்:

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வூஹான் நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. 29-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியா சார்பில் பிவி சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், எச்எஸ் பிரனோய் ஆகியோர் கலந்துகொண்டனர். பிவி சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்எஸ் பிரனோய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய், கொரியாவின் வான் ஹோ சன் உடன் மோதினார். இந்த போட்டியில் 18-21, 23-21, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பிரனோய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

முன்னதாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, கொரியாவின் ஜி ஹியுன் சங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சங், 21-19, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிந்து தொடரைவிட்டு வெளியேறினார். #BAC2018 #PVSindhu #HSPrannoy