செய்திகள்

மோசமான வானிலை: அரியானா முதல் மந்திரி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

அரியானா மாநிலத்தில் நிலவிய மோசமான வானிலையால், முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் இருந்து குர்கான் செல்வதற்காக முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.

ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமடைந்தது. இதையடுத்து, ஹெலிகாப்டரால் செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பைலட், உடனே அவசரமாக தரையிறக்கினார்.

SCROLL FOR NEXT