செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல் பிடிப்பட்டது - 8 பேர் கைது

மராட்டியம் மாநிலம் தானே பகுதியில் குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலைச் சேர்ந்த பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

மும்பை:

மராட்டியம் மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள முலுந்த் செக் நாகா என்ற பகுதிக்கு அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக இரண்டு பேர் 1 மாத ஆண் குழந்தையுடன் வந்துள்ளனர். இருவரிடம் போலீசார் குழந்தையை பற்றிய கேட்ட கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் குழந்தையை கடத்தி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய பலரை பற்றிய விவரங்களையும் போலீசார் கைப்பற்றினர். அதன் மூலம் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட 1 மாத குழந்தையை தானேவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.