போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்தினர்.
இந்த தாக்குதலில் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் ஒரு வீட்டில் இருந்த பத்து நாள் கைக்குழந்தை படுகாயம் அடைந்தது. மேலும் இரு பெரியவர்களும் காயமடைந்தனர்.