ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தங்கர்போரா கிராமத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்குள்ள ஒரு வீட்டினுள் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் ஒரு பெண் குழந்தை உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.