செய்திகள்

அஸ்லான ஷா கோப்பை ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம் 2-4 என வீழ்ந்தது இந்தியா

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தயா 2-4 என தோல்வியடைந்தது.

மாலை மலர்

ஆறு நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது.

2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் 2-4 என தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்தியா இழந்தது.

இன்று நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து 4-1 என அயர்லாந்தையும், மலேசியா 2-1 என அர்ஜென்டினாவையும் வீழ்த்தியது.

இந்தியா நாளை நடைபெறும் போட்டியில் மலேசியாவையும், 9-ந்தேதி நடைபெறும் போட்டியில் அயர்லாந்தையும் எதிர்கொள்ள இருக்கிறது.