செய்திகள்

தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த டோனி, கோலி, யுவராஜ்-க்கு நன்றி தெரிவித்த அசார் அலி

தனது மகன்களுடன் தங்களது நேரத்தை செலவழித்த டோனி, விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பாகிஸ்தான் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஆனால், தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அணிகளும் இரண்டு முறை மோதினார்கள். கிரிக்கெட் ஆட்டத்திற்கு வெளியே அவர்கள் சிரித்து சகஜமாக பேசிக் கொண்டார்கள்.

இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின், விராட் கோலி, யுவராஜ் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் மெஹ்மூத் உடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ வெளியானது. போட்டிக்கு முன் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கான் மகனை டோனி கையில் வைத்துக் கொண்டு கொஞ்சினார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலி, தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனும் ஆன டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அசார் அலி மகன்களுடன் உள்ளனர்.

அந்த படத்திற்குக் கீழ் ‘‘எனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த மூவருக்கும் நன்றி, எனது மகன்கள் மிகவும் சந்தோசம் அடைந்தனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.