செய்திகள்

நியூசிலாந்து ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியில் அசார் அலி, மொகமது அமிருக்கு இடம்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அசார் அலி, மொகமது அமிர் இடம் பிடித்துள்ளனர்.

மாலை மலர்

ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்காமல் இருந்த அசார் அலிக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல் இலங்கை தொடரில் விளையாடாமல் இருந்த மொகமது அமிர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

காயம் காரணமாக இமாத் வாசிம், ஜூனைத் கான், உஸ்மான் கான் ஆகியோர் இடம்பெறவில்லை. அஹமது ஷேசாத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-