செய்திகள்

கோவை ஆர்ய வைத்ய சாலையில் கேரள சபாநாயகருக்கு சிகிச்சை

ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்ய சாலையில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு ஆயுர் வேத சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

மாலை மலர்

கோவை:

கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேற்று இரவு கோவை வந்தார்.

பின்னர் அவர் ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்ய சாலைக்கு சென்று தங்கினார். அங்கு இன்று முதல் அவருக்கு ஆயுர் வேத சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

மூலிகை எண்ணெய் மூலம் புத்துணர்வு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் அவர் இங்கு தங்கி சிகிச்சை பெற உள்ளார்.

சமீபகாலமாக இந்த ஆர்ய வைத்ய சாலைக்கு அரசியல் பிரபலங்கள் வந்து பல நாட்களாக தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இங்கு வழக்கமாக சிகிச்சை பெறுவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை பெற்றார்.

பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை மற்றும் மத்திய மந்திரிகளும் தங்கி சிகிச்சை பெற்று சென்றனர். தற்போது கேரள சபாநாயகர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.