தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 
செய்திகள்

அயோத்தி நிலம் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பாக மத்தியஸ்தக் குழுவின் முன்னர் இருதரப்பினரும் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதியளித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்வானி அக்ஹாரா ஆகிய அமைப்புகள் முன்வந்துள்ளதாக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட மத்தியஸ்தர்கள் குழு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.