அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.