கைது 
செய்திகள்

அயனாவரம் அருகே மதுகுடிக்க பணம் தராததால் முதியவரை பிளேடால் வெட்டியவர் கைது

அயனாவரம் அருகே மதுகுடிக்க பணம் தராததால் முதியவரை பிளேடால் வெட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அம்பத்தூர்:

அயனாவரம், கே.கே.நகரை சேர்ந்தவர் ரமேஷ் (56). இவரிடம் நேற்று இரவு பக்கத்து தெருவில் வசிக்கும் இமானுவேல் என்பவர் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது ரமேஷ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இமானுவேல் மறைத்து வைத்திருந்த பிளேடால் முதியவர் ரமேசின் முகம், கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேசுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலை கைது செய்தனர்.