செய்திகள்

பேராவூரணி ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு செய்த வாலிபர் கைது

பேராவூரணி ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

பேராவூரணி:

பேராவூரணி வீரமணி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாண்டீஸ்வரன் (வயது 31). இவர் ஆட்டோ வாங்கி, பேராவூரணி பள்ளிவாசல் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வாடகைக்கு விட்டுள்ளார். இவருக்கும் சண்முகநாதன் மகன் ராமகிருஷ்ணன் (22), அவரது சகோதரர் கஜேந்திரன் (28), அவரது உறவினர் மணிகண்டன் ஆகியோருக்கும் இடையே வாடகைக்கு ஆட்டோ ஓட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் பாண்டீஸ்வரனை ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாண்டீஸ்வரன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.